×

நயனுக்கு விக்கி தான்... பிரபு தேவாவிற்கு வாய்ப்பே இல்லை - ஐசரி கணேஷ் பளீச்!

கோலிவுட்டின் சர்ச்சை காதல் ஜோடியான நயன்தாரா- பிரபு தேவா சுமார் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக நேற்றிலிருந்தே பல இணையத்தளங்களில்  செய்தி வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட அளவிற்கு  பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அந்த காதல்     பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தான் இப்படி ஒரு வதந்தியை கொளுத்திப்போட்டுவிட்டனர். இது குறித்து நடந்த உண்மைகளை பற்றி பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது, கடந்த 2017ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியது.

ஆனால், அந்த  படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கப்பபோவதாகும், இயக்குனர் பிரபு தேவா என்றும் படத்தில் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் எனவும் பொய்யான தகவல் பரவி விட்டது.  இதில் துளி கூட உண்மை இல்லை... இன்னும் சொல்லப்போனால் அந்த படத்தை எடுக்கும் ஐடியாவே எனக்கு இல்லை.

எனவே பிரபு தேவா இயக்கத்தில் இல்லை... மாறாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தான் நயன்தாரா "காத்துவக்குல ரெண்டு காதல்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News