nayan atlee
Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண நிகழ்ச்சியை டாக்குமெண்டரியாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து தற்போது பல சம்பவங்களும் இணையத்தில் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தனிநாயகியாக வளர்ந்தவர் நயன்தாரா. ஒரு கட்டத்தில் அவருடைய ஸ்டைலில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் அவருடைய கெட்ட காலமோ என்னவோ சமீபத்திய காலமாக அவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் தோல்வியை தழுவி வருகிறது.
இதையும் படிங்க: Dhanush: பதில் சொல்ல நேரமில்ல.. நயன்தாரா அறிக்கைக்கு பிறகு தனுஷின் தந்தை கொடுத்த பதில்
இதனால் தமிழ் நடிகர்களும் நயன்தாராவை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்வதை தற்போது தவிர்த்து வருகின்றனர். இதனால் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தன்னுடைய ஸ்டைலுக்கு நயன் திரும்ப இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தங்களுடைய திருமணத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிட எண்ணிய நயன் மற்றும் விக்கி ஜோடி வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் இந்த டாக்குமெண்டரி சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து நயன்தாரா கடிதம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டு சொன்ன நானும் ரவுடிதான் காட்சிக்காக தனுஷ் பத்து கோடி இழப்பீடு கேட்டிருந்தார்.
ஆனால் அந்த காட்சியை நீக்காமல் அப்படியே தன்னுடைய திருமண டாக்குமெண்டரியில் இந்த ஜோடி வெளியிட்டு இருப்பது தற்போது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நடிகர் தனுஷ் விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வரிசையாக பிளான் போட்டு இருக்காரே… சத்தமில்லாமல் தனுஷின் அதிரடி…
இது ஒரு புறம் இருக்க டாக்குமென்டரியில் பல முக்கிய பிரபலங்கள் பேசியிருக்கின்றனர். அப்படி இயக்குனர் அட்லீ தங்களுடைய முதல் படம் குறித்து பேசி இருக்கிறார். அட்லீ நயன்தாராவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பாராம். ஆனால் அவர் என்னை அப்படி கூப்பிடாதே என்பாராம்.
ராஜா ராணி படத்தின் கதையை அவரிடம் சொன்னபோது பொறுமையாக கதை கேட்டாராம். முதல் பகுதி முடிந்த பிறகு இதில் எனக்கு ஹீரோவை தெரியவில்லை. ஹீரோயினுக்கு தான் வேலை இருக்கிறது என்றாராம். பின்னர் மொத்த கதையையும் கேட்டுவிட்டு இரண்டு நாள் கழித்து பதில் சொல்கிறேன் என அட்லீயை அனுப்பிவிட்டாராம்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த படத்திற்கு நயன்தாரா ஓகே சொன்னதாக அட்லீ தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக இன்னும் பல பிரபலங்கள் நயன்தாரா குறித்து பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…