×

இந்த நாள்.. உன் காலெண்டர்ல குறிச்சு வச்சுக்கோ... மறக்கவே முடியாது... நயன் ரசிகர்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து நடிக்கிறார்களாம் என்று செய்தி வெளியானது.
 
C4jbClIXAAAKwTp

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டார்கள். காதல் முறிவுக்கு பிறகு ஆளுக்கொரு பக்கமாக சென்று அவரவர் கெரியரில் கவனம் செலுத்தினார்கள். இந்நிலையில் தான் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து நடிக்கிறார்களாம் என்று செய்தி வெளியானது.

முன்னாள் காதலர்களான அவர்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்ல ராஜா என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் வியக்கும் வகையில் சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தார்கள்.

பழசை எல்லாம் மறந்துவிட்டு அவர்கள் நடித்தனர். பர்சனல் வேறு, வேலை வேறு என்று அவர்கள் பிரித்துப் பார்த்த மெச்சூரிட்டி தான் ரசிகர்களை கவர்ந்தது. சிம்பு தயாரித்து நடித்த இது நம்ம ஆளு படம் ரிலீஸாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.

பாலிவுட்டில் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடிப்பது எல்லாம் சகஜமாகிவிட்டது. ஆனால் கோலிவுட்டில் அப்படி இல்லை. இந்நிலையில் தான் சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து நடித்தார்கள். இதனை தற்போது சிம்பு மற்றும் நயன் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நயன்தாராவுடன் மட்டும் அல்ல தன் முன்னாள் காதலியான ஹன்சிகாவுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் சிம்பு. யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கும் மஹா படத்தில் ஹன்சிகாவின் காதலராக நடித்துள்ளார் சிம்பு. அவரை தனக்கு காதலராக்குமாறு ஜமீலிடம் பரிந்துரை செய்ததே ஹன்சிகா தான் என தகவல் வெளியானது.

From around the web

Trending Videos

Tamilnadu News