சமந்தா சண்டையால் கடுப்பில் நயன்... திடீர் நிச்சயதார்த்தம்... வைரலாகும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா கிளிக்

தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடி. நானும் ரவுடி தான் படத்தில் துவங்கிய காதல் பல வருடங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த ஜோடி போடும் ஒற்றை புகைப்படத்துக்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ட்ரெண்ட்டிங்கில் இருக்கும் இருவரும் எப்போதும் திருமணம் என தொடர்ந்து கேள்விகளும் றெக்கை கட்டி வருகின்றன.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அப்படத்தில் விக்னேஷ் சிவன் மீது நயனின் கைவிரலும் அதில் ஒரு மோதிரமும் இடம் பெற்று இருக்கிறது. விரலோடு உயிர்கூட கோர்த்து... என விக்னேஷ் போட்டு இருக்கும் கேப்ஷனும் தான் தற்போதைய சோஷியல் மீடியாக்களின் வைரல் டாப்பிக். நயனுக்கு திருமணம் ஆக போகிறது என பல யூகங்கள் கிளம்பி இருக்கிறது. ஆனால், அந்த படத்தில் இருப்பது நிச்சயதார்த்த மோதிரமெல்லாம் இல்லை. சாதாரண காதல் புகைப்படம் தான் என நெருங்கிய வட்டாரம் கிசுகிசுக்கிறது.
மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் சமந்தாவின் நடிப்பை படக்குழு பாராட்டிய போது நயன் கடுப்பான சேதி சமீபத்தில் கசிந்தது. அதற்கான சமாதான படலமே இந்த புகைப்படம் எனவும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.