பாகுபலியை மிஞ்சும் சரித்திர படத்தில் நயன்தாரா... அப்ப தெறி ஹீட்டுதான்!..
Mon, 28 Dec 2020

ஐயா திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருப்பவர் நடிகை நயன்தாரா. தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டவர். இவர் நடித்தாலே திரைப்படம் ஹிட் என்கிற நிலை உருவாகியுள்ளது,.
இந்நிலையில் ஃபைவ் ஸ்டார், விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படம் வீர மங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்ட சரித்திர திரைப்படமாகும்.
எனவே, திரையில் புதிய நயன்தாராவை ரசிகர்கள் சந்திக்கும் வேளை வந்துவிட்டது.