Categories: Cinema News latest news

அந்த விஷயத்தை மறைக்காத நயன்தாரா.. குழப்பத்தில் திரையுலகம்.! இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.?!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் வேணும் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் சமயத்தில் இருந்து காதலித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இருந்தும் அவர் அடுத்தடுத்த பெரிய படங்களில், குறிப்பாக ஷாருக்கானின் ஜவான் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன்  – மச்சானை நம்பி மலையேறிய அருண் விஜய்.! அதிர்ச்சியில் உறைந்து போன தயாரிப்பாளர்கள்.!

இந்நிலையில் நடிகை நயன்தாரா, தற்போதெல்லாம் வரும் போட்டோக்களில் அவர் கழுத்தில் தாலி அணிந்தபடி தான் போஸ் கொடுத்து வருகிறார். அதே போல தான் சினிமாவில் நடித்தும் வருகிறாராம்.

இதையும் படியுங்களேன்  – சியான் விக்ரம் vs தளபதி விஜய்.! நேருக்கு நேர் மொத்தம் 7 முறை.! வெற்றி யார் பக்கம் தெரியுமா.?!

சினிமாவில் கழுத்தில் தாலி உடன் வெகு நாட்கள் நடிக்க முடியாது. ஒன்று அதற்கு தகுந்த குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும். இல்லையென்றால், நடிப்புக்கு குட் பை சொல்ல வேண்டும். ஆதலால் விரைவில் அவர் சினிமாவுக்கு பிரேக் போட உள்ளார் என்றும் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்படுகிறது. இதன் முடிவு என்ன என்பது நயன்தாராவின் அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்து விடும்.

Manikandan
Published by
Manikandan