Categories: Cinema News latest news

நயன்தாராவால் சமந்தாவுக்கு குவியும் வாய்ப்புகள்.. மன வேதனையில் லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்…

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில இருக்கிறார். என்னதான் இப்போது பல நடிகைகள் வந்தால் கூட, நயன்தாராவிற்கு இருக்கும் மார்க்கெட் குறையவே இல்லை.

இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் கமிட் ஆன சில முக்கியமான பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், திருமணம் முடிவதற்கு முன்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்ததாம், இப்போது சற்று குறைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க படுகிறது.

இதையும் படியுங்களேன்- இந்த விஷயத்துக்காக தான் விஜய் தலைமறைவா சுத்துறாரா.? விஷயம் தெரிஞ்சி போய்டுச்சே…

ஆம், இவருக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள் பல தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வரும் சமந்தமாவிற்கு வருகிறதாம். ஏற்கனவே இவர்கள் இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட, சமந்தா நடித்திருந்த கதிஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.  இப்படி இருக்கையில், நயன்தாரா நடிக்கவுள்ள பல பெரிய படங்களின் வாய்ப்பு, சமந்தாவிற்கு செல்வதால், சற்று வேதனையில் இருக்கிறாராம் நயன்தாரா ரசிகர்கள்.

Manikandan
Published by
Manikandan