×

குடுத்துவச்ச காதலன்... கோவாவில் இருந்து வீடு திரும்பிய நயன்தாரா

மீண்டும் வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் போட்டோ

 

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். படப்பிடப்பிப்பு , வெகேஷன் என எப்போது ஜோடி புறாக்கள் போன்று காதலில் கரைந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட அண்மையில் இருவரும் தனி விமானத்தில் சென்றனர்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து அங்கிருந்து கிளம்பி கோவாவிற்கு சென்ற இந்த காதல் ஜோடி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளில் செம சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து தற்ப்போது சென்னை திரும்பியுள்ளார். நயந்தாராவுடன் வெளியில் செல்ல முடியவில்லை என ஒரே ஒரு போஸ்ட் தான் போட்டார் விக்கி,  உடனே காதலனை அழைத்துக்கொண்டு ட்ரிப் அடித்து மகிழ்வித்து மகிழ்ந்த்துள்ளார் நயன்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News