Categories: Cinema News Gossips latest news

நயன்தாரா செஞ்சது சரி.!? பத்திரிக்கையாளர்கள் வராதது ரெம்ப நல்லதா போச்சு.! ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ…

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து இத்தனை நாள்கள் ஆன பிறகும் இன்னும் அவர்களைப் பற்றிய செய்திகள் ஓய்ந்த பாடில்லை. திருமணத்திற்கு முன்பு பத்திரிகையாளர் சந்தித்தது, திருமணத்தின்போது பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதது ,அடுத்து தம்பதியினராக பத்திரிக்கையாளரை ஒன்றாக சேர்ந்து சந்தித்தது என்று அனைத்திற்கு பின்னரும் ஒரு காரணம் இருக்கின்றதாம்.

திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நாங்கள் திருமணம் முடிந்த பிறகு உங்களை தம்பதியினராக வந்து சந்திக்கின்றோம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அதாவது திருமணத்தின் போது பத்திரிகையாளர்கள் வந்து திருமணத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு நகர்ந்தாராம்.

அண்மையில் வலைப்பேச்சு வீடியோவில் மூத்த பத்திரிகையாளர் அந்தணன் குறிப்பிடுகையில், ‘ஒரு பத்திரிக்கையாளர் அந்த திருமண நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளார்.  அப்போது, அந்த பத்திரிக்கையாளர் என்னிடம், ‘ சார் ஒன்னு சொல்லுவேன். கோபித்து கொள்ளாதீர்கள். உண்மையில் பத்திரிக்கையாளர்கள் அந்த திருமணத்திற்கு வராமல் திருமணம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. எந்தவித கூச்சல் என எதுவுமில்லை. நயன்தாரா – விக்னேஷ் சிவன் சரியான முடிவுதான் எடுத்துள்ளனர்.’ என கூறினாராம்’

இதையும் படியுங்களேன் – ஆடி கார் கொடுத்து சிவகார்த்திகேயனை ஆட்டைய போட நினைத்த தயாரிப்பளார்.! இது பலே திட்டம்.!

அதேபோல் தம்பதியராக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பத்திரிகையாளர் சந்தித்த போது அங்கு அவ்வளவு கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாம். வந்திருந்தவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் மாறி மாறி கேள்விகள் எழுப்பி வந்தனராம். அதற்கு பெரும்பாலான கேள்விகளுக்கு இவர்களால் பதிலளிக்க கூட முடியவில்லையாம். அந்த அளவுக்கு கூச்சல் அதிகமாக இருந்ததாம். இதனையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டனர்

உண்மையில் திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதனை பொது உலகிற்கு தெரிய வைப்பதும், தெரிய வேண்டாம் என்று கூறுவதும், அவர்களது சொந்த விருப்பம்.

Manikandan
Published by
Manikandan