Connect with us

Cinema News

தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா…! அதுவும் எதுக்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!

நடிகை நயன்தாரா ஒரு முறை நடிகர் தனுஷிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா இன்று வெளியிட்டு இருந்த அறிக்கையானது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கின்றது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு  சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதையும் படிங்க: வேட்டையனுக்கு பயந்து அமரன் கிட்ட மாட்டிகிட்டீங்களே பங்கு?!… கேப்பே விடாமல் அடிக்கும் பிரபலம்!…

திருமணம் தொடர்பான வீடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் நடிகை நயன்தாரா அது ஆவணபடமாக வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். சரி அந்த வீடியோவாவது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அது குறித்த பேச்சே இல்லை.

இந்நிலையில் வரும் நவம்பர் 18ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகும் தெரிவித்திருந்தார்கள். இதனை பல கோடி கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கின்றது. இதற்கான ட்ரெய்லர் வீடியோவும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல் சுமார் மூன்று வினாடிக்கு வருகின்றது.

இதற்காக நடிகர் தனுஷ் பத்து கோடி கேட்டிருக்கின்றார். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவிற்கு நயன்தாரா தனுஷை கடுமையாக பேசியிருந்தார். இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கு தனுஷ் பதில் அளிப்பாரா? என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பிரபலங்கள் பேசி வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் தற்போது நடிகை நயன்தாராவின் அறிக்கை தான் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியான சமயத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் தனுஷிடம் நடிகை நயன்தாரா மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: Nayanthara: டார்கெட் தனுஷ் இல்ல.. நயனின் பிசினஸ் புத்தி எப்படியெல்லாம் வொர்க் ஆகுதுனு பாருங்க

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விருது விழாவில் நானும் ரவுடிதான் படத்திற்காக நயன்தாராவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் என்னுடைய நடிப்பு தனுசுக்கு பிடிக்கவில்லை. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை கட்டாயம் சிறந்த நடிப்பை கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்போது தனுஷ் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top