யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

 
யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் நடிகை என்கிற இடத்தை பிடித்தார். ரசிகர்கள் இவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் கொடுத்தனர். விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுடன் டூயட் பாடினாலும் ஒரு பக்கம் அறம், நெற்றிக்கண், மாயா, நானும் ரவுடிதான் போன்ற சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிக்க துவங்கினார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதையும் படிங்க: பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்!.. தக் லைப் படத்தில் சிம்பு வந்ததன் பின்னணி!. இவ்வளவு நடந்திருக்கா!. மேலும், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார். இப்போது சினிமாவில் நடிப்பது, படங்களை தயாரிப்பது, வினியோகம் செய்வது, புதுப்புது தொழில்களில் முதலீடு செய்வது என கலக்கி வருகிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மூலம் ஹிந்திக்கும் போய்விட்டார். இந்த படம் 1000 கோடியை தாண்டி வசூல் செய்தது. ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 6 கோடி வரை சம்பளம் வாங்கிய நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே தனது சம்பளத்தை 10 கோடியாக ஏற்றிவிட்டார். இந்நிலையில், கேஜிஎப் பட புகழ் நடிகர் யாஷ் நடிக்கவுள்ள புதிய படமான டாக்சிக் எனும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளது படக்குழு. இதையும் படிங்க: விஜய் படத்தை தட்டி பறித்த அஜித்குமார்… ஓபனாக போட்டு உடைத்த இயக்குனர்… இந்த படத்தை கீத்து மோகன்தாஸ் என்கிற இயக்குனர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் யாஷின் அக்காவாக நடிக்கவே அவரை அணுகியிருக்கிறார்கள். அக்கா என்றால் இரண்டு மடங்கு சம்பளம் வேண்டும் என யோசித்த நயன்தாரா 20 கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறார். யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!.. ஏற்கனவே இப்படத்தில் கரீனா கபூர், சாய் பல்லவி, சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், நயன்தாராவின் பெயர் அடிபட்டிருக்கிறது. கேஜிஎப் படம் போலவே இந்த படமும் பேன் இண்டியா அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web