டாக்ஸிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜம்முன்னு வந்த நயன்தாரா!.. பக்கத்துல யாரு பாருங்க!..

 
nayanthara

பெங்களூருவில் இன்று நடைபெற்ற டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு சேலை அணிந்து நடிகை நயன்தாரா பங்கேற்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கேவிஎன் மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ள டாக்ஸிக் படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கும் படத்தில் யஷ் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்துள்ளார். 


கியாரா அத்வானி எச்சில் துப்புவது, ஆடையின்றி ருக்மணி வசந்த் முன்பாக நிற்பது, நயன்தாரா தேடி வரும் போது யஷ் வேட்டிக் கட்டுவது என ஏகப்பட்ட முரட்டுத்தனமான அடல்ட் ஒன்லி காட்சிகள் டிரைலர் முழுக்க நிரம்பி வழிகின்றன.

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிக்கும் படங்களுக்கே பெரிதாக புரமோஷனுக்கு வராமல் தவிர்த்து வரும் நயன்தாரா டாக்ஸிக் படத்தின் புரமோஷனுக்கு ஆரஞ்சு நிற சேலை அணிந்து பெங்களூரில் ஜம்முனு வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கருநாடக சக்கவரத்தி புனித் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், நயன்தாரா அவர் அருகே வந்து அமர்ந்து பேசும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கவினின் ஹாய் படத்துக்கான புரமோவிலும் சமீபத்தில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web