×

சுற்றி வளைத்த ரசிகர்கள்...தெறித்து ஓடும் நயன்தாரா.. வைரல் வீடியோ....

 
nayanthara

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தமிழில் அஜித், விஜய் , ரஜினிகாந்த், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

nayanthara

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம்வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புகிறார்.அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. 

nayanthara

இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்து கிளம்பும்போது அவரின் காரை ரசிகர்கள் சுற்றி வளைத்துவிட்டனர். ஒருவழியாக படக்குழுவினர் அவரை ரசிகர்களிடமிருந்து காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நயன்தாராவும் சிரித்தபடி ரசிகர்களுக்கு டாடா காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். 

From around the web

Trending Videos

Tamilnadu News