Categories: Cinema News latest news

Nayanthara: கல்யாணம் யாருக்குமே நடக்கலையா? அதுக்கு இவ்ளோ அக்கப்போரா நயன்தாரா? விளாசும் பிரபலம்

நயன்தாரா, தனுஷ் விஷயம் இப்போது காட்டுத்தீயாக வலைதளங்களில் பற்றி எரிகிறது. அப்படி என்னதான் பிரச்சனை என்று பார்ப்போம்.

3 வினாடி காட்சி

நயன்தாரா என்ன மகாத்மா காந்தியோட வாழ்க்கை வரலாற படமா எடுத்துட்டாரா இல்ல அம்பேத்கார் வாழ்க்கை வரலாற படமா எடுத்துட்டாரா? அவரோட கல்யாணத்துக்கு ஆவணப்படத்தை எடுத்துருக்காரு.

Also read: நான் சூர்யாவின் மனைவி இல்ல… நயன்தாராவை தொடர்ந்து அறிக்கை விட்ட ஜோ

எனக்கு எந்த பின்புலமும் இல்லாம தானே சுயமா முன்னேறி வந்தேன்னு சொல்றதுக்காக இந்தப் படத்தை எடுத்து அதை ஓடிடில விற்கப் போறாரு. அதுல நானும் ரௌடி தான் படப்பாடல்ல இருந்து 3 வினாடி காட்சி வருது.

 எவ்வளவு லாபம்

vsn

அதுக்கு சொந்தக்காரரான தனுஷ் கொடுக்க மறுக்கிறார். அதுக்காக 10 கோடி கேட்கிறார். அவர் முதல் போட்டவரு. கேட்கத்தானே செய்வாரு. அவருக்குத் தெரியாதா? இந்தப் படத்தை இவங்க எவ்வளவு ரூபாய்க்கு விற்பாங்க? எவ்வளவு லாபம் கிடைக்கும்னு. இதுக்கு நடுவுல நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் தனுஷ் போட்ட டயலாக்கையே வாழு வாழ விடு என்பதையே பதிவா போடுறார.

கல்யாணத்தை வச்சி வருமானம்

அப்புறம் அழிக்கிறார். தனுஷ் நயன்தாராவுக்குப் பெரிய துரோகம் செய்துவிட்டதா சொல்றாங்க. பொதுவெளியில பேசப்படுற விஷயமா இது என கொந்தளிக்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. வேறு என்னென்ன சொல்றாருன்னு பாருங்க. எல்லாரும் செலவு பண்ணித்தான் கல்யாணம் பண்ணுவான். ஆனா கல்யாணத்தை வச்சி வருமானம் பண்றீங்க.

ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்

கல்யாணம் என்பது ஆடம்பரம் இல்லாதது தான் சரியான திருமணம்னு தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க. நீங்க பொதுவெளியில் இதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பிரபலம் என்ற பெயரில் எல்லாத்தையும் காசாக்கிடுதீங்க. புகழ் வந்துடுச்சுன்னா எல்லாத்தையும் காசாக்கிடுறாங்க. எங்கே போனாலும் காசு. எனக்குத் தெரிஞ்சி ஒண்ணை மட்டும் தான் காசாக்கல. டாய்லட்டுக்குப் போறதுதான் அது.

காசாக்கிட்டு பொதுவெளியில இதையும் விவாதிக்க விட்டா மனுசனுக்கு வேற வேலையே கிடையாதா? இது ரொம்ப தவறு தான். ஏழை எளியவன் இந்தக் கல்யாணத்தைப் பார்த்தா அவனுக்கும் ஆசை வரும். அவன் கடன் வாங்கி நடுத்தெருவுல நிப்பான். அப்படின்னா உங்க கல்யாணத்துல என்ன சொல்ல வர்றீங்க?

ரொம்ப கேவலம் 

Also read: Kanguva: ஓடிடிக்கு ‘ஓடிவரும்’ கங்குவா… ‘ரிலீஸ்’ எப்போன்னு பாருங்க! ..

ஏழை எளியவங்களை நடுத்தெருவுல நிக்க வைக்கிறதுதானா? நீங்க ஆடம்பரத்தோடு பண்ணுவீங்க. எங்கேயோ சம்பாதிச்சி வக்கிறீங்க. இதைப் பொதுவெளியில விவாதிக்கிறது ரொம்ப கேவலமானது. இதை மக்கள் தவிர்க்கணும். தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மூணு பேரும் ஒரு அறைக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை இது என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v