நயன்தாரா மொட்டை அடித்ததாக பரவிய புகைப்படம்.. வெளியான உண்மை!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தற்ப்போது அவரது நடிப்பில் கவினுடன் ஹாய் மற்றும் யஷ் உடன் டாக்ஸிக் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் டாக்ஸிக் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் மொட்டை அடித்துக்கொண்டதாக கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. மேலும், தனது வரவிருக்கும் டாக்சிக் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நயன்தாரா மொட்டை அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
வழக்கமாக திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நயன்தாரா, டாக்சிக் படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸுடன் நெருக்கமாக காணப்பட்டதும் இந்த வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது.
ஆனால் தற்போது புகைப்படத்தின் பின்னணி குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வந்த நயன்தாராவின் மொட்டை புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்றும், அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி படங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதிக்கு சென்றபோது நயன்தாரா வரிசையில் நின்றிருந்த புகைப்படம் ஒன்றை எடுத்து, அதில் அவரது தலைமுடியை நீக்கியது போன்று ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
நயன்தாரா தரப்பில் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், வைரலான மொட்டை புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்பது தற்போது உறுதியாகியுள்ளது.