கண்ணும் கண்ணும் நோக்கியும் காதலனை பார்க்க முடியாமல் தவிக்கும் நயன்தாரா?
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதை நாம் அறிவோம். சொந்த வாழ்க்கையை தவிர்த்து, திரையுலகில் இருவரும் புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளனர்.

தற்போது ஹைதராபாத்தில் தான் இருவருமே இருக்கிறார்களாம். ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிலும், நடிகை நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பிலும் தனித்தனியாக இருந்து வருகிறார்களாம்.
படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் இருக்கிறார்களாம். கடந்த ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்ட அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் 'அண்ணாத்த' டீமிற்கும் செய்யப்பட்டுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
கொரோனா அச்சம் காரணமாகவும், பயோ பபுள் முறையால் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறாராம்.