×

நயன்தாராவிற்கு ஆப்பு கன்பார்ம்... தயாரிப்பாளர்கள் முடிவு? அம்மணியின் சம்பள கெடுபிடிகள் அம்பளம்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் அல்லது தெலுங்கு படங்களில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். 
 
 

அவருக்கு மார்க்கெட் இருப்பதால் தயாரிப்பாளர்களும் சரி என்று அவர் கேட்கும் தொகையை கொடுக்கிறார்கள். தமிழ், தெலுங்கு படங்களுக்கு பல கோடிகள் கேட்கும் நடிகை தன் தாய் மொழியான மலையாள படங்களில் நடிக்க மட்டும் சம்பள விஷயத்தில் அடம்பிடிப்பது இல்லை. 

அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார். அண்மையில் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அவர் வெறும் ரூ. 1 கோடி சம்பளம் தான் வாங்கியுள்ளாராம்.

வளர்த்து விட்ட தமிழ் படங்களில் நடிக்க ரூ. 5 கோடி, மலையாளத்தில் நடிக்க ரூ. 1 கோடியா, இது நியாயமே இல்லை என்று தயாரிப்பாளர்கள் குமுறுகிறார்களாம். 

நடிகை இப்படி பாராபட்சமாக நடந்து கொள்வது குறித்து கலந்தாலோசித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். நயன்தாராவிற்கு ஆப்பு காத்திருக்கிறது கன்பார்ம்.

From around the web

Trending Videos

Tamilnadu News