விஜய்க்கு அப்புறம் SK வா? யார் சொன்னது? நடிகர்களை தரம் பிரித்த நயன்தாரா
கடந்த இரண்டு தினங்களாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நயன்தாரா கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். மும்பையில் நடந்த அந்த நேர்காணலில் சினிமா பற்றிய அவருடைய அனுபவத்தை பலவாறு பேசியிருக்கிறார்.
அதில் வலைப்பேச்சு சேனலை தாக்கி பேசியது மிகவும் வைரலானது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மிகவும் பக்குவப்பட்டவராக மாறி இருக்கிறார். புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் குடும்பம் குழந்தை இன்னொரு பக்கம் தொழில் சினிமா என ஒரு சிங்கப் பெண்மணி ஆகவே சுற்றி வருகிறார் நயன்.
அது மட்டுமல்ல சினிமாவில் சமீப காலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து அந்த படங்களில் நடித்து வருகிறார் .கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக இந்த சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.
தற்போது விஜய் அரசியலுக்கு சென்று இருப்பதால் அவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தில் எந்த நடிகர்கள் வருவார்கள் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது .பெரும்பாலானவர்களின் பதில் சிவகார்த்திகேயன் தான் என கூறி வருகின்றனர்.
யார் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது என்பதைப்போல நயன்தாரா அந்த பேட்டியில் கொடுத்த ஒரு விளக்கம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சில நடிகர்கள் தான் டாப்பில் இருப்பார்கள். அந்த வகையில் ரஜினி மோகன்லால் மம்முட்டி இவர்களுடன் நான் பணியாற்றி இருக்கிறேன்.
இவர்கள் முதல் தலைமுறை நடிகர்கள். விஜய் ,அஜித் இரண்டாம் தலைமுறை நடிகர்கள்., சூர்யா ,விக்ரம் மூன்றாவது தலைமுறை நடிகர்கள். தனுஷ், சிம்பு நான்காவது தலைமுறை நடிகர்கள். சிவகார்த்திகேயன் ஐந்தாவது தலைமுறை நடிகர் மற்றும் கவின் ஆறாவது தலைமுறை நடிகர் என சீனியாரிட்டி அடிப்படையில் நயன்தாரா நடிகர்களை இப்படி தரம் பிரித்து காட்டியிருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் எப்பவும் போல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். விஜய் அஜித் சூர்யா விக்ரம் இந்த நான்கு பேருமே ஒரே காலத்தில் வந்தவர்கள்தான். இவர் எந்த விதத்தில் இப்படி பிரித்துக் காட்டுகிறார் என தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.