கவின், நயன்தாராவின் Hi புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Aug 7, 2026, 17:27 IST
நயன்தாராவின் கோலிவுட் ஃபேன்ஸ் அவருடைய புதிய படத்தை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக தயாராகியிருக்கும் ஃபீல் குட் ரொமான்டிக் படம் தான் 'ஹாய்' (Hi).
இதில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம 'பிக் பாஸ்' கவின் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார், சத்யன், VTV கணேஷ் நடித்துள்ளனர்.
Pala pala soup'u vaanguna boy... will see you on Aug 28th :) #Hi pic.twitter.com/2UCDq57BK3
— Kavin (@Kavin_m_0431) August 7, 2026
விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த படத்தை முதலில் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.