நயன்தாரா - கவின் ஜோடியாக நடித்திருக்கும் 'Hi'... ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!
Jul 14, 2026, 14:04 IST
பிரபல நடிகை 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்த தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் தான் தியேட்டர்களில் சமீபத்தில் வெளியானது. ஆனால், இவர் நடித்த நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டது.
அந்த குறை இன்னும் ஒரு மாதத்தில் தீர்ந்து விடப்போகிறது. ஆம். 'லேடி சூப்பர் ஸ்டார்' ரசிகர்களுக்கு அவர் நடித்திருக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை சொல்லப்போகிறேன்.
நயன்தாரா கவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் படம் தான் ஹாய் (Hi). இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார்.
இதன் முதல் சிங்கிள் ட்ராக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பிடித்தது. தற்போது, இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
