நயன்தாராவின் வாழ்க்கையில் முக்கியமான படம். விட்டுருந்தால் கைமாறி போயிருக்கும்…
நடிகரும் ரேடியோ ஜாக்கியுமாகிய ஆர்.ஜே. பாலாஜியின் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார். மக்களின் சராசரி வாழ்க்கையில் ஆன்மீக சம்பந்தமாக நடக்கும் சில விஷயங்களை நகைச்சுவை கலந்த கதையம்சத்தோடு கண்முன் காட்டியிருப்பார் ஆர்.ஜே.பாலாஜி.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகை ஊர்வசி, சந்திரமௌலி, உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பாலாஜிக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்த படமாக மாறியது.
இந்த நிலையில் பாலாஜி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவுக்கு முன்னாடி இந்த படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை தான் முதலில் அணுகினேன். ஆனால் அவர் எட்டு மாதம் பொறுத்திருங்கள் என்று கூறினார். ஆனால் என்னால் அதுவரை காத்திருக்க முடியவில்லை.
இதையும் படிங்களேன் – ஒவ்வொன்னா க்ளோசப்ல காட்டும் ஷெரின்….வீடியோ பாத்து கிறங்கிப்போன ரசிகர்கள்..
அதே சமயத்தில் நானும் நயனும் நல்ல நண்பர்கள். அதை வைத்து அவரிடம் எல்லையை மீறக் கூடாது என யோசித்துக் கொண்டிருக்கும் போது நயன்தாராவே எனக்கு போன் செய்து எல்லாருக்கும் வாய்ப்பு தருகிறாய் எனக்கு ? என கேட்டவுடன் அவரிடம் இந்த மூக்குத்தி அம்மன் கதையை கூறி அவருக்கும் பிடித்து போக அதிலிருந்து வந்தது தான் இந்த படம். ஆனால் அந்த எட்டு மாதம் பொறுத்திருந்து படம் பண்ணியிருந்தால் நயன்தாராவை அனுஷ்கா ரூபத்தில் தான் நாம் பார்த்திருக்க முடியும்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…