×

விக்னேஷ் சிவனுக்கு நாமம் போட்ட நயன்தாரா... மீண்டும் பிரபு தேவாவுடன் கைகோர்க்கிறாரா...?

கோலிவுட்டின் சர்ச்சை காதல் ஜோடியான நயன்தாரா- பிரபு தேவா சுமார் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக செய்தி வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறியிருக்கிறார்.

 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட அளவிற்கு  பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அந்த காதல்     பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார். இது விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்தநேரத்தில் போய் மீண்டும் முன்னாள் காதலரின் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் தூக்கி வாரி போட்டுவிட்டது.

ஏன்..? என்ன காரணம்..? விக்னேஷ் சிவனுடன் ஏதேனும் சண்டையா...? என பல கோணங்களில் யோசித்து பார்க்கையில். கொஞ்சம் அரசல் புரசலாக நம்பக்கூடிய விஷயம் காதிற்கு எட்டியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவனோ திருமணம் செய்துகொள்ளலாம் என பல வருடங்களாக நயன்தாராவிடம் கேட்டு வருகிறார். அதற்கு அவர் க்ரீன் சிக்னல் காட்டவேயில்லை. இன்னும் நடிக்கணும்... பெரிய ஹீரோயினா வரணும் என சாக்கு போக்கு சொல்லி வருகிறாராம்.

அதற்கு ஏற்றார் போல் விக்னேஷ் சிவனும் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  " நானும் ரவுடி தான் படத்தின் போது எடுத்த சில வீடியோக்கள், கண்ணான கண்ணே பாடலுக்கு லோகேஷன் பார்த்த போது எடுத்த வீடியோ.. உள்ளிட்டவரை வெளியிட்டு அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் நிச்சயம் இந்த காதால் ஜோடிக்கு இடையில் ஏதோ நடந்திருப்பது உண்மை என்பது தெளிவா புரியுது... எது எப்படியோ கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்.

From around the web

Trending Videos

Tamilnadu News