×

அப்படியென்றால் நயன்தாரா இனி நடிக்கமாட்டாரா.. ஷாக்கிங் நியூஸ்!

தமிழக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கதாநாயகியாக நடிக்க தேவையில்லை கெஸ்ட் ரோலில் நடித்தால்கூட போதும் அந்த படத்தை திரையில் பார்க்க ஒரு பெரிய கூட்டமே ஆவலுடன் காத்திருக்கிறது.

 
nayanthara

தமிழக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கதாநாயகியாக நடிக்க தேவையில்லை கெஸ்ட் ரோலில் நடித்தால்கூட போதும் அந்த படத்தை திரையில் பார்க்க ஒரு பெரிய கூட்டமே ஆவலுடன் காத்திருக்கிறது.

அந்தளவிற்கு மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார் நயன்தாரா. கடந்த 2005ல் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நாயகனாக நடித்த ஐயா படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

Nayanthara
Nayanthara

பின்னர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது அவருடன் காதலில் விழுந்தார். பின்னர் காதல் தோல்வியடைந்ததால் மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடிக ஆரம்பித்தார். அந்தவகையில் தல அஜித்தின் 'பில்லா' படத்தின் பிகினியில் மிகவும் கவர்ச்சியாக வந்து அசத்தியிருப்பர்.

பின்னர் விஜய்யுடன் 'வில்லு' படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் பிரபு தேவாவுடன் காதலில் விழுந்தார். அவரை திருமணம் செய்வதற்காக மதம் கூட மாறினார். ஏற்கனவே திருமணமான பிரபுதேவா இவருடன் ஜோடியாக பொதுவெளியில் சுற்றிவந்தார். ஆனால், இந்தக் காதலும் தோல்வியில் முடிந்தது.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அந்தப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவிங் டூ கேதரின் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு ஷோவில் கலந்துகொண்ட நயன்தாரா தான் அணிந்திருந்த மோதிரத்தை காட்டி இது தன் நிச்சயதார்த்த மோதிரம் என கூறினார்.

Nayanthara-vignesh sivan
Nayanthara-vignesh sivan

இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. திருமணத்திற்குப் பின் நயன்தாரா நடிப்பதற்கு முழுக்கு போட உள்ளாராம். சினிமா தயாரிப்பு மற்றும் டைரக்சனில் கவனம் செலுத்த உள்ளாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News