Nayanthara: நேற்று முதல் எங்கு திரும்பினாலும் நயன்தாரா-தனுஷ் விவகாரம் தான் மிகுந்த வைரலாகி வருகிறது. கல்யாண வீடியோவிற்கு ஒரு சிறிய கிளிப் கேட்டேன். 2 வருடங்கள் காத்திருந்தும் அவர் அனுமதி கொடுக்கவில்லை. அவரை போல தந்தை, சகோதரன் ஆதரவுடன் திரைத்துறைக்கு வந்தவள் நான் அல்ல.
என் சொந்த உழைப்பில் திரைக்கு வந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறேன். கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதில் தனுஷுக்கு தான் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க கதறிட்டே இருங்க… தனுஷின் அடுத்தக்கட்ட பிளான் செமையா இருக்கே…
இதற்கிடையில் நயன்தாரா அளித்த பழைய இண்டர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் முன்பு எக்மோர் அருகேயுள்ள சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருந்தார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்திற்கு பிறகு குழந்தைகளுடன் இருவரும் அதில் வசித்தனர்.
ஆட்டோ டிரைவர்
அதில், ‘ நான் இருக்கும் அபார்ட்மெண்டில் ஒருநாள் பார்க்கிற்கு சென்றேன். குழந்தைகளுடன் சென்றபோது வேகமாக ஆட்டோ டிரைவர் உள்ளே வந்தார். அவரிடம் வேகத்தை குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்கும்படி ஆனது.
Nayanthara
டெலிவரி பாய்
என்னுடைய தளத்திற்கு வருகை தரும் டெலிவரி நபர் மிகுந்த சத்தமாக போனில் பேசுகிறார். அவரால் எனது குழந்தைகள் அவதிப்பட்டனர். இப்போது நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கி குடியேறி விட்டேன். அங்கு நிம்மதியாக இருக்கிறது,’ என்றார்.
ரசிகர்கள்
இதைப்பார்த்த ரசிகர்கள் ஆட்டோ டிரைவரிடம் சொன்னால் அவர் வேகத்தை குறைத்திருப்பார். டெலிவரி பாய் போனில் பேசக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அப்படி என்ன நீங்கள் பெரிய சாதனை செய்து விட்டீர்கள் என்று அவரை விட்டு விளாசி வருகின்றனர்.
இதையும் படிங்க: Nayanthara: ‘சின்னவரிடம்’ சென்ற நயன் பஞ்சாயத்து?… தனுஷின் பதில் என்ன? ,,
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…