×

தனனு முன்னாள் காதலர்கள் பற்றி பளிச்சுனு பேசிய நயன்தாரா

என்னை எப்படி இந்த வேலையைவிட்டு தடுப்பது. ஹோம் மேக்கராக இருக்க வைக்க முயல்வது என்று நடந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
 
Nayan

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படத்தின் புரமோஷனுக்காக விஜய் தொலைக்காட்சியில் ‘நெற்றிக்கண் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார்.

அதில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நயன்தாரா பதிலளித்தார். அந்த வகையில் தனது குடும்பம் குறித்து முதல் முறையாக நயன்தாரா பேசியுள்ளார். அப்போது தனது அப்பா குறித்துப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்.

Nayan

கணவர் பற்றி நயன்தாரா தெரிவிக்கையில், நான் சாதாரணமாக பார்க்கும் பெரும்பாலான ஆண்கள், நம்ம வொர்க் பண்றது, லைஃப்ல முன்னேறுகிறோம் அதை எப்படி நிறுத்துவது என்று நினைப்பார்கள். என்னை எப்படி இந்த வேலையைவிட்டு தடுப்பது. ஹோம் மேக்கராக இருக்க வைக்க முயல்வது என்று நடந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

பெண்களால் சமைக்க, வேலை பார்க்க, குழந்தை பார்க்க, ஷூட்டிங் போக முடியும் என்று கூறி பெண்களை பற்றி பேசியுள்ளார் இதையடுத்து அவர் (விக்னேஷ் சிவன்) வந்த பிறகு தான் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Nayan

இதுகுறித்து நயன் தாரா முன்னாள் காதலர்கள் இப்படி நடந்து கொண்டதை தான் கூறியுள்ளாரா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News