Connect with us
nayanthara

Cinema News

பிளாஸ்டிக் சர்ஜரியா செஞ்சிருக்கேன்… இங்க தொட்டு பாருங்க… ஓபனா பேசிட்டாரே நயன்!..

Nayanthara: நடிகை நயன்தாரா ஆரம்பத்திலிருந்து முகத்தோற்றத்தை விட தற்போது மேலும் வித்தியாசமாக மாறி இருப்பதால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என சர்ச்சை பல நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது இதற்கு நயன்தாரா விளக்கம் அளித்திருக்கிறார்.

நயனின் ஆரம்பகாலம்: தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அப்படம் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. அந்த நேரத்தில் இவருக்கு சிம்புவுடன் ஆன காதல் மலர்ந்தது.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!

இருவரும் சில காலம் காதலித்து வந்த நிலையில் திடீர் பிரேக்கப் ஏற்பட சினிமாவிலிருந்து சில காலம் பிரேக் எடுத்தார் நயன்தாரா. இதை தொடர்ந்து சிவாஜி படத்தின் ஒற்றை பாடல் மூலம் மீண்டும் உள்ளே வந்தவரை பார்த்து பலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதுவரை குண்டாக இருந்த நயன்தாரா மேலும் மெலிந்து வேறு முகத்தோற்றத்துடன் காணப்பட்டார். தொடர்ச்சியாக அவருடைய முகத்தோற்றத்தில் மாற்றம் இருந்து கொண்டே இருந்தது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் மேலும் மெலிந்து இளம்பெண் தோற்றத்திற்கு வந்தார்.

இதையும் படிங்க: Thalapathy 69: விஜயுடன் இணைந்த ‘சூப்பர்ஸ்டார்’ நடிகர்… வேற லெவல் போங்க!

இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா தொடர்ந்து தன்னுடைய முகத்திற்கு சிகிச்சை எடுத்து வருவதாக பேசிக் கொண்டிருந்தனர். பல டாக்டர்கள் கூட இன்ஸ்டாகிராம் மூலம் நயன் தன்னுடைய முகத்தில் எத்தனை சிகிச்சைகள் செய்திருக்கலாம் என வீடியோ வெளியிட்டதும் வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறேனா? என்னை கிள்ளி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை எரித்து கூட  பாருங்கள். எங்குமே பிளாஸ்டிக் வராது. என்னுடைய முகத்தோற்றம் மாறியதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் டயட் உணவுகள் தான் காரணம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top