சொந்த படம்னா புரமோஷனுக்கு வருவேன்!.. நயன்தாரா திடீர் போஸ்ட்டால் எழுந்த சர்ச்சை?..

 
nayan

நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் அப்படத்தில் பணியாற்றிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தும், இந்தப் படம் தனது மனதுக்கு நெருக்கமான படைப்புகளில் ஒன்று என்பதை அவரது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நயன்தாரா அதை தொடர்ந்து உருவாகும் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

nayan

தனது பதிவில், இயக்குநர் சுந்தர் சியின் கற்பனைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் படத்தின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் காட்டிய அக்கறையை நயன்தாரா பாராட்டியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் படத்தின் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி. நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, குஷ்பு, சினேகா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை பார்த்த பலரும் ஹாய் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்தது போல இந்த படத்திற்கு நயன்தாரா வருவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், மூக்குத்தி அம்மன் 2 ப்ரோமோஷனுக்கு வராமல் இருக்கவே இந்த பதிவு என்றும் விமர்சித்து வருகின்றனர். தனது தயாரிப்புக்கு காட்டும் அக்கறையை நயன்தாரா மற்றவர்களின் படத்திற்கும் காட்டுவாரா என்பதை காத்திருந்து பார்கலாம்.

Tags

From Around the web