தனது மகன்களுக்காக நோ சொல்லி வந்த நயன்தாரா... ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4'-க்காக எடுத்த அதிரடி முடிவு!

 
Nayanthara raghava Lawrence kanchana 4

ஹாரர் காமெடி ஜானரில் 'முனி, காஞ்சனா - பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3' என வரிசையாக படங்களை இயக்கி, நடித்த ராகவா லாரன்ஸ் இடையில் கொஞ்சம் இதுக்கு பிரேக் விட்டிருந்தார்.

இப்போது மீண்டும் ஆடியன்ஸை பயமுறுத்தி சிரிக்க வைக்க 'காஞ்சனா' படத்தின் பார்ட் 4-ஐ உருவாக்கி வருகிறார் லாரன்ஸ். இதில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா தான் பேயாக வலம் வரப்போகிறார்.

மேலும், முக்கிய வேடங்களில் பூஜா ஹெக்டே, நோரா பதேகி நடிக்கிறார்கள். இதன் ஷூட்டிங் பனையூரில் போடப்பட்ட செட்டில் தான் 130 நாட்கள் நடைபெற்று வந்தது. ஒரு வழியாக அந்த லொகேஷனுக்கு குட்-பை சொல்லிவிட்டு, படக்குழுவினர் TR கார்டனுக்கு வந்துவிட்டனர்.

அங்கு நயன்தாராவின் ஃபிளாஷ்பேக் காட்சிகளை இரவில் படமாக்கி வருகிறார்களாம். பொதுவாக தனது இரண்டு மகன்களான உயிர் & உலகுக்காக நைட் ஷூட்டுக்கு நோ சொல்லும் 'லேடி சூப்பர் ஸ்டார்', அவர்கள் வளர்ந்து விட்டதால் ஓகே சொல்லி விட்டாராம்.

From Around the web