சிவகார்த்திகேயனுக்காக சிபாரிசு செய்த நயன்.. அப்போ அடுத்து அங்கதானா?
டாக் ஆப் தி டவுன்:இப்போது தமிழ் சினிமாவில் டாக் ஆப் தி டவுன் ஆக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரைப்பற்றி தான் இப்போது பெரும்பாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அமரன் திரைப்படம். அந்த ஒரு படம் காரணமாக இருந்தாலும் தொடர்ந்து அவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயனின் டார்கெட்:தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதுவும் விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அஜித் ஒரு பக்கம் ரேசில் கவனம் செலுத்துகிறார். விஜய்க்கு அடுத்தபடியாக அவருடைய இடத்தை நிரப்புவது யார் என்று ஒரு கேள்வி எழுந்த நிலையில் அனைவரின் கணிப்பாகவும் சிவகார்த்திகேயன் ஆகத்தான் இருந்தது.
பக்கா ப்ளான்:அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயன் மட்டும்தான் தகுதியானவர் என அனைவரும் கூறி வருகிறார்கள். அமரன் திரைப்படம் பெரிய அளவில் அனைவர் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல அடுத்தடுத்து ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா என பெரிய பெரிய இயக்குனர்களுடன் கைகோர்த்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நயன் செய்த உதவி:அதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சிவகார்த்திகேயனிடம் இருந்து தரமான படங்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நயன்தாராவின் மறைமுகமான சப்போர்ட்டும் இருப்பதாக தெரிகிறது.
நயன்தாரா சமீபத்தில் தேசிய சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அது மிகவும் வைரலானது. அந்த பேட்டியை எடுத்தது அனுபமா சோப்ரா. அதைப்போல சிவகார்த்திகேயனும் அதே சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அவரையும் நேர்காணல் செய்தது அதே அனுபமா சோப்ராதான்.
சிவகார்த்திகேயனின் ஆசை: அதனால் திடீரென சிவகார்த்திகேயன் அந்த தேசிய ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க காரணமாக இருந்தது நயன்தாரா என கூறப்படுகிறது. ஏனெனில் அமரன் திரைப்படம் நார்த் இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனால் நாமும் பாலிவுட் பக்கம் சென்றால் என்ன என்ற ஒரு ஆசை சிவகார்த்திகேயனுக்கும் இருந்திருக்கும் போல.
அதனால் அனுபமா சோப்ரா போன்ற ஒரு திறமை மிகுந்த இந்திய அளவில் பிரபலமான ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தால் அது சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளஸ் ஆக அமையும். இதன் மூலம் பாலிவுட் பக்கமும் அவர் செல்ல வாய்ப்பு இருக்கிறது என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.