டாக்ஸிக் விழாவில் நயன்தாரா அணிந்திருந்த நகை மற்றும் புடவையின் விலை இவ்வளவா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர்  நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகம் ஆன இவர்
 
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர்  நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகம் ஆன இவர் இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக  நாயகியாக நடித்து வருகிறது. தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி  பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

 நயன்தாரா நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி  பெங்களூருவில் நடைபெற்றது. அதில்  நயன்தாரவும் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த ஆரஞ்சு நிற புடவையும்,  நகைகளும் பலரையும் கவர்ந்தன. 

Nayanthara

இந்நிலையில் நயன்தாரா அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைகளின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அணிந்திருந்த புடவையின் விலை சுமார் ரூ.22,900 என்றும், பிரேஸ்லெட்டின் விலை சுமார் ரூ.23 லட்சம்  என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் அணிந்திருந்த மோதிரத்தின் விலை சுமார்  ரூ.8.25 லட்சம்  எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நயன்தாராவின் இந்த லுக்கில் இடம்பெற்றுள்ள புடவை மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாயை தாண்டுகிறது.

படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா அணிந்து வந்த இந்த ஸ்டைலிஷ் லுக் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுகிறது.

From Around the web