×

பாலிவுட்டிலும் கால் பதிக்கும் நயன்தாரா...!

 
ngh

noi9

நயன்தாரா என்றாலே நம்பர் 1 நடிகை என்று தமிழ்சினிமா தரப்பில் இன்று வரை பேசப்பட்டு வருகிறார். அவரது கவர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அவரது அழகு, ஸ்டைல் உடன் நடிப்புத்திறமையும் கூடுதலாகவே உள்ளது. அதனால் தான் இன்று வரை நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்து வருகிறார்.

அவர் நடித்த படங்களில் ஐயா, சந்திரமுகி, சிவாஜி, சிவகாசி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல், நானும் ரௌடிதான், நண்பேன்டா, திருநாள், கொலையுதிர்காலம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

nj

இவற்றில் ஐயா படத்தில் தான் நயன்தாரா அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என ரௌண்டு கட்டி நடித்து வருகிறார் நயன்தாரா. உச்சநடிகர் ரஜினிகாந்துடன் உச்ச நடிகை நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள அண்ணாத்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.

mok

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக நயன்தாரா நடிக்கிறார். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

shn

இந்நிலையில் நடிகை நயன்தாரா, அடுத்ததாக இயக்குனர் அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் தற்போது நயன்தாரா அப்படத்தில் ஜோடியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


 
 
 
 
 

From around the web

Trending Videos

Tamilnadu News