தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா தற்போது ஷாரூக்கானுடன் ஜாவான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதுபோக தமிழில் ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் நயன் தற்போது பிரேக் எடுத்து தனது காதல் கணவனுடன் பார்ஸிலோனா சென்றிருக்கிறார்.
வெளி நாட்டில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் திவிட்டு வரும் நயன் பார்சிலோனாவிற்கு சென்ற முக்கிய காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ஏற்கெனவே பாலிவுட்டில் விசிட் அடித்திருக்கும் நயன் அடுத்ததாக ஹாலிவுட்டில் தன்னுடைய மார்க்கெட்டை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் சென்றிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.எதையும் பிஸினஸ் மைண்டோடு பார்க்கும் நயன் இதையும் அதே நோக்கில் தான் சென்றிருக்கிறார்.
விக்கியுடன் சுற்றுலா சென்ற மாதிரியும் ஆச்சு அதே சமயம் ஹாலிவுட்டில் தன்னுடைய பங்கை அளிப்பதற்கான முதற்கட்ட முயற்சியும் எடுத்த மாதிரியும் ஆச்சு. அதுமட்டுமில்லாமல் வேறொரு பிஸினஸ்க்காகவும் சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் கோடம்பாக்கம் முழுவதும் நயனை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…