அந்த மாதிரி இந்த படம் இருக்கும் - ஹாய்க்கு ஹைப் ஏத்தும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கவின் நடித்து வருகிற 28ம் தேதி வெளியாக உள்ள படம் ஹாய்
 
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கவின் நடித்து வருகிற 28ம் தேதி வெளியாக உள்ள படம் ஹாய். லோகேஷ் கனகராஜ் உதவியாளர் விஷ்ணு எடவன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில்  நயன்தாராவுடன் பிரபு, கே. பாக்யராஜ்,ராதிகா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின்  ரௌடி பிக்சர்ஸ்  ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

nayanthara

இந்த நிலையில் ஹாய் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. விழாவில் கவின், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நயன்தாரா, இப்படம் மிகவும் ஸ்வீட்டான படம். படத்தை பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்கள் முகத்தில் ஒரு ஸ்மைல் இருக்கு. இந்த படம் பயங்கர டிராமடிக்கா இருக்குமா என்றால் இருக்காது. ஆனால் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். குடும்பத்துடன் போய் பார்க்கலாம் என்றார்.

nayanthara

மேலும் அவர் பேசுகையில், நாம் இப்போ ரீசன்டா ஆக்சன் பப்டங்களையே அதிகம் பார்க்கிறோம்.ஒரு லாவ் ஸ்டோரி , அல்லது குடும்ப பாடம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஹாய் படத்தை குடும்ப்பத்துடன் ப்போய் பார்க்கலாம். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கலாம்.மீண்டும் மீண்டும் பர்க்கலாம். அப்படி இருக்கும்  இந்த படம் என்று ஹாய் படத்திற்கு ஹைப் ஏற்றி பேசினார் நயன்தாரா.   

From Around the web