×

பிரபல நடிகருடன் ஜோடி போட மறுத்த நயன்தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா: அதுவும் சூப்பர்ஹிட் பட ரீமேக்கில்

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ரீமேக் படத்தில் உடன் நடிக்க முன்னணி நடிகைகள் மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ரீமேக் படத்தில் உடன் நடிக்க முன்னணி நடிகைகள் மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் மன்னன்.விஜயசாந்தி,குஷ்பு நடித்துள்ள இந்த படத்தை பி.வாசு இயக்கினர். சிவாஜி புரொடெக்சன் சார்பில் நடிகர் பிரபு தயாரித்தார்.

1992ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தி ரீமேக் செய்ய பி.வாசு விரும்பியுள்ளார். இதனை அறிந்த ராகவா லாரன்ஸும் உடனடியாக கால்ஷீட் வழங்குவதாகவும் கூறினாராம். இதையடுத்து படத்தின் உரிமையாளரான பிரபுவிடம் பி.வாசு இது குறித்து கூறினாராம்.ஆரம்பத்தில் யோசித்த பிரபு பின்னர் சம்மதம் தெரிவித்தாராம் 

இந்த நிலையில் விஜயசாந்தி வேடத்தில் நடிக்க தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோடிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூரப்படுகிறது. ஆனால் என்ன காரணத்தாலோ மூவருமே வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனாலும் இவர்களில் ஒருவர் நடித்தால் மட்டுமே அந்த வேடத்திற்கு பொறுத்தமாக இருக்கும் என்பதால் மீண்டும் பேச்சுவர்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மன்னன் பட ரீமேக் குறித்து அதிகாரபூர்வ செய்திகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.         
 

From around the web

Trending Videos

Tamilnadu News