2022 முதல் தொடர் தோல்விகளை கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி  படங்களில் நடித்துள்ளார்
 
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி  படங்களில் நடித்துள்ளார். கதாநாயகர்களுக்கு இணையாகத் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான  மனசினக்கரே  படம் மூலம் அறிம்முகம் ஆனார். தமிழில் 2006ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படமே ஹிட் ஆனதை அடுத்து அடுத்த படம் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்ப்ய் வந்தது. சந்த்ஹிரமுகியில் ஹீரோயிஒன் ஆனார் நயன்தாரா. இப்படம் இவ்ருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து அஜித்துடன்  பில்லா , விஜய்யுடன் வில்லு , சூர்யாவுடன் ஆதவன் , ஆர்யாவுடன்  பாஸ் என்கிற பாஸ்கரன்  உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

nayanthara

குறிப்பாக யாரடி நீ மோகினி , ராஜா ராணி ,  தனி ஒருவன் ,  நானும் ரவுடிதான்  ,  இருமுகன்,  விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் நயன்தாராவின் திரைப்பயணத்தில் முக்கியமான  படங்களாக அமைந்தன.

ஒரு கட்டத்தில் கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமின்றி, கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.  மாயா ,  அறம் ,  கோலமாவு கோகிலா ,  இமைக்கா நொடிகள்  உள்ளிட்ட திரைப்படங்கள்  அவருக்கு வெற்றியை கொடுத்தது. இந்த  திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார்  என்ற அடையாளத்தை  நயன்தாரா மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

 2022ஆம் ஆண்டு வெளியான  காத்துவாக்குல ரெண்டு காதல்  திரைப்படம் நயன்தாராவுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், அதன்பிறகு தமிழில் அவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே ஆண்டு வெளியான  ஓ2 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதே ஆண்டில் வெளியான  கனெக்ட் திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. 2023ஆம் ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த  இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே ஆண்டில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அன்னபூரணி  திரைப்படமும் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை.

2025ஆம் ஆண்டு வெளியான  டெஸ்ட்  திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அந்தப் படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு வெளியான  ஹாய்  திரைப்படமும் நயன்தாராவுக்கு எதிர்பார்த்த திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், 2023ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து நடித்த இந்திப் படமான  ஜவான்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

nayanthara

 

 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான  மூக்குத்தி அம்மன்  திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் நவம்பர் 6ஆம் தேதி வெளியான மூக்குத்தி அம்மன் 2  திரைப்படம் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் வசூல் சொல்லிகொள்ளும் அளவிற்கு இல்லை. 

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்ததுடன், தனி கதாநாயகியாகவும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுவந்த  நயன் தாராவின் படங்கள் தற்போது வரிசையாக தோல்வி அடைந்து வருவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்பப்டுத்தி உள்ளது. ஆனாலும்  நயன்தாரா இனி வரும் படங்கள் மூலம் மீண்டும் தனது வெற்றியை மீண்டும்பதிவு செய்வார் என்று சமூக வலைதளங்களில் பல்ரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

From Around the web