மம்மூட்டி பக்கத்துல நயன்தாராவோட உயிரும் உலகமும் என்ன பண்றாங்க பாருங்க!..
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலக், மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான மம்மூட்டி உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களில் மம்மூட்டி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நயன்தாரா மற்றும் மம்மூட்டி இடையே நீண்டகால நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் இணைந்து பணியாற்றியுள்ள இந்த இருவரும், சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான பேட்ரியாட் மூலம் மீண்டும் திரையில் இணைந்தனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய இந்த அரசியல் உளவாளி த்ரில்லர் திரைப்படம், கடந்த மே 1, 2026 அன்று வெளியானது. இப்படத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நயன்தாரா மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதற்கிடையில்,தற்போது நயன்தாரா தமிழில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்
திருமண வாழ்க்கை மற்றும் சினிமாவை சமநிலைப்படுத்தி வரும் நயன்தாரா, சமூக வலைதளங்களில் பகிரப்படும் குடும்ப புகைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். தற்போது மம்மூட்டியுடன் உயிர் மற்றும் உலக் இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகின்றன.
