×

வித்தியாசமாகக் கைதட்டிய நயன்தாரா & விக்னேஷ் சிவன் ஜோடி !

நேற்று ஊரடங்கை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் மக்கள் கைதட்டினர்.

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு போக்குவரத்து, வணிகம், நிறுவனங்கள் என அனைத்தும் விடுமுறை அறிவித்தன. மேலும் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆதரவாக மாலை 5 மணிக்கு கைதட்டி உற்சாகப்படுத்துமாறும் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து மக்களும் அதுபோல செய்து மருத்துவர்களை ஊக்குவித்தனர். இதையடுத்து தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரொமாண்டிக்காக கைதட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் ஆளுக்கு ஒரு கைக் கொண்டு கைதட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News