Connect with us

Gossips

ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு விருந்து.! நயன் – விக்கி தம்பதியினர் செய்த புண்ணிய காரியம்.!

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வந்த நட்சத்திரங்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆவர்.  இவர்கள் இருவரும் சிலமாதங்களுக்கு முன்னர் தங்கள் குடும்பத்தார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

nayanthara

இதனை தொடர்ந்து தற்போது இன்று சென்னை அருகில் ஈசிஆரில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸ்டாரண்ட்டில் வைத்து இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழாவிற்கு இந்தியா முழுவதும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் –  ரஜினி செஞ்ச செயலால் கலங்கி நின்ற ‘பீஸ்ட்’ நெல்சன்.! நல்ல மனுஷன் சார் நீங்க…

இது ஒருபுறமிருக்க தங்கள் திருமண நாள் மற்றவர்களுக்கும் நல்ல நாளாக அமையவேண்டும் என்று விக்னேஷ் சிவன் நயன்தாரா ஒரு நல்ல செயலை செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இவர்கள் நிதியுதவி அளித்து, சுமார் 1 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனராம். இவர்களின் இந்த நெகிழ்ச்சி செயல் திரையுலகில் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top