Connect with us

Gossips

இதுல கூடவா விளம்பரம்.? நயன்தாரா – விக்னேஷ் சிவனை நொந்து கொண்ட பிரபலங்கள்.!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இன்று சென்னைக்கு அருகில் ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸ்டாரண்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு விஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு யாரும் செல்போன், கேமரா கொண்டு போகக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனென்றால், இந்த கல்யாண வைபவத்தை விக்னேஷ் நயன்தாரா இருவரும் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்திற்கு விற்று விட்டனராம். அதன் காரணமாக ஒளிபரப்பு உரிமையை அவர்கள் தான் பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – லோகேஷ் எப்படிடா சினிமாவுக்குல்ல வந்தான்.! காமெடி நடிகரிடம் நொந்து கொண்ட தளபதி விஜய்.?

மேலும்,  திருமண வைபவத்திற்கு சென்ற மற்ற அழைப்பாளர்கள், பிரபலங்கள் அங்கு நடந்தவற்றை சிலவற்றை போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர். அதில் வந்தவர்களுக்கு கொடுக்கும் தண்ணீர் பாட்டிலில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திருமண  வைபோவாத்தை பிரபல OTT நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள். தற்போது, தண்ணீர் பாட்டிலில் கூட தங்கள் பட விளம்பரத்தை பதிவு செய்கிறார்களே என்று சினிமாவாசிகள் சிலாகித்து வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top