Categories: Cinema News latest news

நயன்தாரா கிட்ட அடி வாங்க வைச்சிராதீங்க., டிடி-யிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்.!

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருந்து விரைவில் திருமண பந்தத்திற்குள் நுழைய இருக்கும் ஜோடிதான் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் .

இருவரும் 2015இல் நானும் ரவுடி தான் பட ஷூட்டிங் சமயத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்து, அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

வரும் ஜூன் 9ஆம் தேதி மஹாபலிபுரத்தில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. அண்மையில் ஒரு விழா நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கி வந்தார்.

இதையும் படியுங்களேன் –   கமல் ஒரு தீர்க்கதரிசி.! அது சின்ன சாம்பிள் ‘இந்த’ சூப்பர் விஷயம் தான்.!

அப்போது, டிடி, இருவரையும் மேடையில் வைத்து, என்ன மேடம் அந்த முக்கியமான தேதியில் (திருமணம் ) என்ன கலர் ட்ரெஸ் போட்டிருப்பீங்க., விக்னேஷ் சிவன் சார் நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் ‘ என கேட்கவே,

பதறிப்போன விக்னேஷ் சிவன், ‘ ஏன் எதற்கு, நான் ஒரு கலர் சொல்லி, அவங்க வேற கலர் யோசிச்சி வைச்சி’ என மழுப்பினார். உடனே டிடி. ஆமா ஆமாம் அப்புறம் யாரு அடி வாங்குறது? என பேசி கலகலப்பாக அந்த விழாவை தொடர்ந்தார் தொகுப்பாளினி டிடி.

Manikandan
Published by
Manikandan