Categories: Cinema News latest news

ரொமான்ஸில் புகுந்து விளையாடும் விக்கி – நயன்தாரா….வைரல் புகைப்படங்கள்….

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்தவுடன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். மேலும், ஹனிமூனில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். அதன்பின் சில புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில், இருவரும் ஹீரோ – ஹீரோயின் போல் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா