மூக்குத்தி அம்மனை காப்பாத்துப்பா... காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா! ​​​​​​​

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான  நயன்தாரா , சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளா
 
mookuthi amman 2

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான  நயன்தாரா , சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் நடித்துள்ள  மூக்குத்தி அம்மன் 2  திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், படம் வெற்றி பெற வேண்டி அவர் கோயிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் . ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கிய இந்தப் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். அவருடன் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, மௌலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பக்தி, நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. 

அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது  மூக்குத்தி அம்மன் 2  பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜிக்கு பதிலாக இயக்குநர்  சுந்தர் சி இயக்கியுள்ளார். நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேசனல் பிலில்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.  

mookuthi amman 2

முதல் பாகத்தைவிட 2ம் பாகம் அதிக பட்ஜெட், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுடன் ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் பாகத்தில் அம்மனாக ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவை மீண்டும் அதே கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைஒலர் படம் ம்மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்தது. 

mookuthi amman 2

இந்த நிலையில்  மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார். தீபாவளிக்கு  மூக்குத்தி அம்மன் 2  வெளியாகவுள்ள நிலையில், படம்  வெற்றி பெற வேண்டியே நயன்தாரா காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. 

From Around the web