ஜெய்பீம் படத்தில் நடிக்க நயனும் ஒரு காரணம்.. மணிகண்டன் சொன்ன தகவல்

by Rohini |
nayanthara
X

உண்மை கதை ஏற்படுத்திய தாக்கம்: கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை இப்படி ஒரு மக்கள் இருக்கிறார்கள் என யாருக்குமே தெரியாது.

இந்த படம் ரிலீஸ் ஆகி தான் இந்த மாதிரி ஒரு கிராமத்தில் இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என தெரிந்து அவர்களுக்கு தேவையான உதவியை அரசாங்கம் செய்து கொடுத்தது. அந்த அளவுக்கு இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தாலும் அனைவரின் கவனமும் ராஜா கண்ணு என்ற கதாபாத்திரத்தின் மீதுதான் திரும்பி இருந்தது.

கமல் சொன்ன வார்த்தை: அந்த அளவுக்கு ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்த விதம் அனைவரையும் கண்கலங்க செய்தது. ஏன் கமலே இந்தப் படத்தை பார்த்து மணிகண்டனை அழைத்து 2 டிஸ்யூ பாக்ஸ் காலி என மிகவும் கண்கலங்கி சொல்லி பாராட்டினாராம். இந்த படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் மணிகண்டன் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார்.

இந்த படத்திற்காக இரண்டு மாதம் இந்த கிராமத்திலேயே தங்கி இருந்து அந்த கிராமத்து மக்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அதன் பிறகு இந்தப் படத்தில் நடித்ததாக கூறினார். முதலில் இந்த படத்திற்கு ரைட்டராக பணிபுரிய தான் ஞானவேல் இவரை அழைத்து இருக்கிறார். ஏனெனில் மணிகண்டன் பல படங்களுக்கு ரைட்டராக இருந்தவர். குறிப்பாக விக்ரம் வேதா, தம்பி, விசுவாசம் போன்ற படங்களுக்கு இவர்தான் ரைட்டராம்.


ரைட்டராக பணியாற்றிய படங்கள்: அதனால் ஜெய்பீம் படத்திற்கான வசனங்களையும் எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது தான் ஞானவேல் இவரிடம் ராஜா கண்ணு காப்பாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டாராம். அதற்கு மணிகண்டன் 4 ஆர்ட்டிஸ்ட் பெயர்களை சொல்லி இருக்கிறார். ஆனால் ஞானவேல் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நீயே நடித்தால் என்ன என்ற ஒரு கேள்வியை கேட்டதுமே மணிகண்டனுக்கு ஷாக் ஆகிவிட்டதாம்.

இப்படித்தான் இந்த கதாபாத்திரத்திற்குள் வந்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் மணிகண்டன் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தாராம். அதனால் நான் இப்பொழுது நயன்தாரா மேடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூற நயன்தாராவிடம் 20 நாள் கால்ஷீட் கேட்டு இந்த படத்திற்காக வர முடியுமா என கேட்டிருக்கிறார்கள். இதை நயன்தாராவிடமும் சொல்ல அதற்கு நயன்தாரா சரி ஓகே நானும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிறேன். அதற்குள் நீயும் அந்த படத்தில் நடித்து முடித்திட்டு வா என சொல்லி அனுப்பினாராம் நயன்தாரா. இதை ஒரு பேட்டியில் மணிகண்டன் கூறினார்.

Next Story