காஞ்சனா 4ல் பேயாட்டம் ஆட வருகிறாரா நயன்தாரா?.. பில்டப் எல்லாம் பெருசா இருக்கே பாஸ்!..

 
nayan

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் படமான ‘காஞ்சனா’ தொடரின் அடுத்த பாகமாக உருவாகி வரும் ‘காஞ்சனா 4’ திரைப்படம் குறித்த புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், சமீபத்தில் அரசியல் களத்திலும் ராகவா லாரன்ஸ் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. பொதுச்சேவை மற்றும் மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், தனது சமூக சேவை அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது ராகாவா லாரன்ஸ் லோகேஷ் கணகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ரவி மோகன், சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். 

பென்ஸ் படத்தை தொடர்ந்து காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் முந்தைய பாகங்களை விட அதிகமான திகில், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு என்ன ரோல் என்றும் ஃபிளாஷ்பேக்கில் வருவாரா? அல்லது கேமியோவா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். 

ஏற்கனவே ‘காஞ்சனா’ திரைப்படத் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நயந்தாராவின் சிறப்பு தோற்றம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த கூட்டணி திரையில் இணையக்கூடும் என்ற தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Tags

From Around the web