கமலுடன் நடிக்கவில்லை... ஆனால் கமல் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகும் படம் தர்மன். சிம்ரன், ராஷி கண்ணா என பலர் நடித்து வரும் இப்படத்தினை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். பொங்கல் வெளியீடாக வர உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தில் நயன்தாராவும் இணைந்துள்ளார். இதனை படக்குழு நேற்று அறிவித்தது. தர்பார் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறாகு ரஜினியுடன் நயன்தாரா இப்படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

நயந்தாரா தமிழில் ரஜினி, விஜய்,ம் அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் கமல்ஹாசனுடன் அவர் ஒரு படத்தில் கூட பணியாற்றியதே இல்லை. இது ரசிகர்களுக்கு நீண்ட நாள் ஆசையாகவெ இருந்தது. இந்த நிலையில் கமலுடன் நடிக்கவில்லை என்றாலும் அவரது தயாரிப்பில் நயன் தாரா நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஜெயிலர் 2 பிரமாண்ட வெற்றிக்கு பின் தர்மன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றிப்பிடத்தக்கது.
