Categories: Cinema News latest news

ஓடாத படத்தை ஓடிடியில் பார்த்து கேஸ் போட்ட ராம பக்தர்கள்!.. நயன்தாராவுக்கு எல்லா சைடுலயும் அடி விழுது!

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணாவின் அறிமுக படமான அன்னபூரணி படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது புயல் வெள்ளம் காரணமாக மக்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஓடிடியில் இந்த படம் வெளியான நிலையில், தற்போது நயன்தாரா மீதும் படத்தின் மீதும் மும்பை போலீஸார் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாராவின் திருமண வீடியோ வரும் என அறிவித்த நிலையில், அது கடைசி வரைக்கும் வரவே இல்லை. அதற்கு பதிலாக நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கி வெளியிட்டது.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த ரகசியம் பற்றி யாருக்காவது தெரியுமா? வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம்

அன்னபூரணி படத்தில் ஐயர் வீட்டுப் பெண்ணு அசைவம் சமைப்பவராகவும், இஸ்லாமியரை காதலித்து கிளைமேக்ஸில் பிரியாணி நல்லா செய்யணும்னா தொழுகை பண்ணாத்தான் நல்லா வரும் என தொழுகை செய்யும் காட்சிகளும் ஹீரோவாக இஸ்லாமியர் ஜெய்யை வைத்த நிலையில், இந்த படம் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும், அதே நேரத்தில் ராமரை அசைவ பிரியர் என எப்படி சொல்லலாம் என்கிற கேள்விகளை எழுப்பி இந்து அமைப்பினர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பாக இதை வைத்து புரமோஷன் செய்திருந்தால் கூட படம் ஓரளவுக்கு வசூல் ஈட்டியிருக்கும். நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளம் உட்பட 12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் 80 லட்சம் தான் வசூல் அடைந்து படு தோல்வியை சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படியொரு ஏழரை வேறு வந்திருக்கிறது.

இதையும் படிங்க: தொட்டா வழுக்கிட்டு போகும் சைனிங்!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ஆண்ட்ரியா….

Saranya M
Published by
Saranya M