×

நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" பட முதல் பாடல் ரிலீஸ்

நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

 

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா ஆகியோர் நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும், என்.ஜே. சரவணன் என்பவரோடு இணைந்து இப்படத்தை இயக்கியும் உள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐ.சி.கணேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ரு.13 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினாள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இப்படம் வருகிற தீபாளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ம் தேதி ஹாட் ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் சற்றுமுன் "ஆடி குத்து" என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News