நடிகை நயன்தாராவை கடந்த எட்டு வருடமாக காதலித்து வந்த திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இந்த தம்பதியினர் தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற தி சியாம் ஹோட்டலில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ஹனிமூனுக்கு சென்றதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, வீடு திரும்பியதும் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும், அவரது நடிப்பில் ட்ரீம் வாரியர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமீபத்திய வெளியீடான ‘O2’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, நயன் – விக்கி இருவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் தோல் மீது சாய்ந்து ரொமான்டிக் செய்வது போல் தூங்கும் இவர்களது லேட்டஸ்ட் போட்டோசெம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படிங்களேன் – ஹாலிவுட் நடிகையை அதிர வைத்த நம்ம தனுஷ்.. அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க…
இதற்கிடையில், விக்னேஷ் சிவன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஏகே 62’ படத்தின் ப்ரீ புரொடக்ஷனிலும் ஈடுபடவுள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…