Connect with us
nazriya nazim

Cinema News

8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன் குயின்…! குஷியில் ரசிகர்கள்…!

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நஸ்ரியா நசீம். முதல் படத்திலேயே இவரது அழகால் தமிழ் ரசிகர்களை வசீகரம் செய்துவிட்டார்.

அந்த படத்தை தொடர்ந்து தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும் என அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தனது அழகு மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் அனைத்து ரசிகர்களையும் வெகு விரைவில் கவர்ந்து விட்டார்.

டாப் நடிகையாக முன்னேறி கொண்டிருந்த சமயத்தில் திடீரென மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு பின்னர் படங்களில் நடிப்பதையும் நஸ்ரியா முற்றிலும் தவிர்த்து விட்டார்.

nazriya nazim

இதனால் நஸ்ரியாவின் தமிழ் சினிமா கெரியர் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நஸ்ரியா தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் தற்போது தமிழில் அடடே சுந்தரா என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் நானி நஸ்ரியாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top