தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. நஸ்ரியாவின் அழகே அவரின் முகபாவனைதான். அவர் காட்டும் க்யூட்டான முகபாவனைக்கு ரசிகர்களும் ஏராளம். அந்த படத்தை அடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். ஆர்யாவிற்கு ஜோடியாக ராஜாராணி படம் தான் தமிழில் அவர் நடித்த கடைசி படமாகும்.
அதன் பின் நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்கள்: விக்ரம் பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்த ஷாலினி அஜித்.! நிருபர் கேட்ட கேள்விக்கு கூலான பதில்.!
சமீபத்தில் கூட நடிகர் நானியுடன் அடடே சுந்தரா என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் புரோமோஷனுக்காக கலந்து கொண்ட நஸ்ரியாவிடம் நிரூபர்கள் விக்ரம் படத்தை பற்றி விசாரித்தனர். இன்னும் படம் பார்க்கவில்லை, இன்று தான் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் தமிழில் படங்கள் நடித்து ரொம்ப நாளாச்சு, அஜித் சார் கூட நடிக்கனும் என்று கூறி ”i am waiting” என்ற விஜயின் பிரபலமான வசனத்தோடு தன் ஆசையை பகிர்ந்தார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…